செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சிவகங்கை : இளைஞர் வெட்டி கொலை - சிசிடிவி காட்சியை வெளியிட்டதாகக் கூறி 2 பேர் கைது!

10:13 AM Mar 24, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இளைஞர் வெட்டி  கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சியை வெளியிட்டதாகக் கூறி இருவரைக் கைது செய்ததற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement

காரைக்குடியைச் சேர்ந்த மனோஜ், கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு நிபந்தனை பிணையில் வெளியே வந்தவர்.

இவர் கடந்த 21-ம் தேதி காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வீட்டுக்குச் சென்றபோது 100 அடி சாலையில்  4 பேர் கொண்ட கும்பலால் ஓடஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டார்.

Advertisement

இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான மேலும் மூவரை காவல்துறை தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், அதே பகுதியிலிருந்த கடையின் சிசிடிவியில் கொலை தொடர்பான காட்சிகள் பதிவாகின. இதனை வெளியிட்டதாகக் கூறி, அங்கு பணியாற்றும் ருபேஷ் மற்றும் ஆதவன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement
Tags :
MAINSivaganga: Youth hacked to death - 2 arrested for allegedly releasing CCTV footage!சிவகங்கை
Advertisement