சிவகங்கை : கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தை உயிருடன் மீட்ட பொதுமக்கள்..!
04:24 PM Jan 29, 2025 IST
|
Murugesan M
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையை பொதுமக்கள் உயிருடன் மீட்டனர். கோட்டையூர் ராமசாமி தெருவில் கால்வாயின் ஓரம் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.
Advertisement
இதை தொடர்ந்து அங்கிருந்த இருவர் கால்வாயில் இறங்கி அங்கிருந்த பெண் குழந்தையை உயிருடன் மீட்டனர். குழந்தைக்கு கோட்டையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பச்சிளம் குழந்தையை வீசிச்சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement