சிவகங்கை : நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ய பரிந்துரைத்த SSI சஸ்பெண்ட்!
11:01 AM Jan 27, 2025 IST
|
Murugesan M
சிவகங்கையில் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ய பரிந்துரை செய்ததாக பெண் எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
Advertisement
திருக்கோஷ்டியூர் கிராமத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ராஜேஸ்வரி. இவர் கீழச்செவல்பட்டி பகுதியில் பணியாற்றிய போது, தனது சகோதரி முகவராக உள்ள நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு காவலர்கள் மற்றும் பொதுமக்களிடம் பரிந்துரைத்ததாக தெரிகிறது.
அதனை நம்பி முதலீடு செய்தவர்களுக்கு நிதி நிறுவனம் உரிய தொகையை தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் ராஜேஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
Advertisement
Advertisement