சிவகங்கை : பட்டா வழங்கக்கோரி தரையில் படுத்து புரண்டு முதியவர் போராட்டம்!
04:28 PM Apr 07, 2025 IST
|
Murugesan M
சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை மறித்த முதியவர் ஒருவர், தரையில் படுத்துப் புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
Advertisement
கீழவானியங்குடியைச் சேர்ந்த முதியவர் மகாலிங்கம், தான் குடியிருக்கும் வீட்டிற்குப் பட்டா வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்துள்ளார்.
ஆனால் அது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் விரக்தியடைந்த அவர், ஆட்சியரின் வாகனம் முன்பு படுத்துப் புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து முதியவரைச் சமாதானப்படுத்திய போலீசார், அவரை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தைக்காக அழைத்துச் சென்றனர்.
Advertisement
Advertisement