சி-295 விமான தயாரிப்பு தொழிற்சாலை,இந்தியா-ஸ்பெயின் உறவுகளை வலுப்படுத்தும் - பிரதமர் மோடி
குஜராத்தில் டாடா குழுமத்தின் ராணுவ விமான தயாரிப்பு ஆலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, தொழிலதிபர் ரத்தன் டாடா இருந்திருந்தால் பெருமையாக கருதி இருப்பார் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் வதோதராவில் டாடா குழுமத்தின் ராணுவ விமான தயாரிப்பு ஆலை திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், தொழிலதிபர் ரத்தன் டாடா இருந்திருந்தால் பெருமையாக கருதி இருப்பார் எனக் கூறினார். இந்தியா விமானங்களை தயாரித்து ஏற்றுமதி செய்யப் போவதாகவும், ஏற்றுமதியில் பாதுகாப்புத்துறை 30 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
தனியார் பாதுகாப்புத் துறைகளை ஊக்குவித்து வருவதாகவும், விமான துறையிலும் மேக் இன் இந்தியா திட்டத்தை கொண்டு வருவதாகவும் கூறினார். மேலும், 20 ஆண்டுகளுக்கு பின் முதன் முறையாக ஸ்பெயின் பிரதமர் இந்தியா வருகை தந்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
சி-295 விமானங்களைத் தயாரிப்பதற்கான டாடா விமான வளாகம், இந்தியா-ஸ்பெயின் உறவுகளை வலுப்படுத்துவதோடு, 'மேக் இன் இந்தியா, மேக் ஃபார் தி வேர்ல்ட்' பணியையும் வலுப்படுத்தும் என்றும் பிரதமர் கூறினர்.