செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சீமான் இல்ல பாதுகாவலர் கைது - நாடு தழுவிய ஆர்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக முன்னாள் ராணுவ வீரர் கூட்டமைப்பு எச்சரிக்கை!

07:11 AM Feb 28, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

முன்னாள் ராணுவ வீரரும், சீமானின் பாதுகாவலருமான அமல்ராஜின் கைதை கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக முன்னாள் ராணுவ வீரர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அந்த கூட்டமைப்பைச் சேர்ந்த சுரேஷ் பாபு, சீமான் இல்லத்தின் காவலாளி முன்னாள் ராணுவ வீரர் அமல்ராஜ்யை காவல் ஆய்வாளர் அத்துமீறி தீவிரவாதியை பிடிப்பது போல் பிடித்து சாதியின் பெயரை சொல்லி தாக்கியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் இந்த விவகாரகத்திற்கு தார்மீக பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்றும், பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

இதனை கண்டித்து  இந்தியா முழுவதும் உள்ள அனைத்து முன்னாள் ராணுவ சங்கங்களை ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்றும், காவல் ஆய்வாளர் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதுதொடர்பாக தமிழக டி.ஜி.பி.யிடம் புகார் அளிப்போம் என்றும் அவர்  தெரிவித்தார்.

Advertisement
Tags :
Amalraj arrest issueEx-Servicemen's AssociationFEATUREDformer soldier amalraj arrestMAINNTKseemanseeman house summonseeman summon issueseeman vijayalakshmiseeman vs vijayalakshmi
Advertisement