செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சீமானுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு : ஆவணங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

03:28 PM Mar 21, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாகச் சீமானுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்யச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

2024ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி ஊடகத்திற்குப் பேட்டியளித்தபோது நீதித்துறையை அவமதிக்கும் வகையில் சீமான் பேசியதாகத் தமிழக டிஜிபிக்கு வழக்கறிஞர் சார்லஸ் என்பவர் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

Advertisement

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், சீமான் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

Advertisement
Tags :
MAINseemanSeeman case: Madras High Court orders filing of documents!சென்னை உயர்நீதிமன்றம்
Advertisement