சீரான நீர்வரத்து - குற்றால அருவியில் குளிக்க அனுமதி!
08:30 PM Oct 27, 2024 IST
|
Murugesan M
தென்காசி மாவட்டம் குற்றால் அருவியில் குளிக்க 3 நாட்களுக்கு பிறகு வனத்துறை அனுமதி வழங்கியது.
Advertisement
தென்காசியில் பெய்துவந்த தொடர் கனமழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்தது. இந்நிலையில், பழைய குற்றால அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
Advertisement
3 நாட்களுக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
Advertisement