For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

சீர்காழி அருகே நான்கு வழி சாலை விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு - உயர்மட்ட பாலம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்!

12:56 PM Nov 09, 2024 IST | Murugesan M
சீர்காழி அருகே நான்கு வழி சாலை விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு   உயர்மட்ட பாலம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

சீர்காழி அருகே சுரங்கப்பாதை சாலைக்கு பதிலாக, உயர்மட்ட பாலம் அமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் நான்கு வழி சாலை விரிவாக்க பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் கரைமேடு ஊராட்சிக்கு உட்பட்ட தென்னலக்குடி கிராமத்தில் இருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு செல்லும் பிரதான நெடுஞ்சாலையை, தென்னலக்குடி, ஏடக்குடி வடபாதி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில் தென்னலக்குடி பகுதியில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதற்காக தென்னலக்குடி- வைத்தீஸ்வரன் கோவில் பிரதான சாலை துண்டிக்கப்பட்டு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனை தடுத்து நிறுத்திய மக்கள், பேருந்துகள், அறுவடை இயந்திரங்கள், கனரக வாகனங்கள் செல்லும் வகையில் உயர்மட்ட பாலம் அமைத்து தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement