சீர்காழி அருகே 11 கோயில்களின் பெருமாள் எழுந்தருளி வீதியுலா!
11:56 AM Jan 31, 2025 IST
|
Sivasubramanian P
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருநாங்கூரில் 11 கோயில்களின் கருடசேவை உத்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
Advertisement
திருநாங்கூர் பகுதியில் ஸ்ரீநாராயணபெருமாள், குடமாடகூத்தர், செம்பொன்னரங்கர் உள்ளிட்ட 11 கோயில்கள் அமைந்துள்ளன. இங்கு ஆண்டுதோறும் தை அமாவாசையின் மறுநாள் கருடசேவை உத்சவம் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், 131-ஆம் ஆண்டு கருடசேவை உத்சவத்தையொட்டி சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து 11 பெருமாள்களும் தங்ககருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
Advertisement
இதையடுத்து நடைபெற்ற வீதியுலாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசித்தனர்.
Advertisement