சுகாதார வளர்ச்சியில் புரட்சியை ஏற்படுத்திய ஆயுஷ்மான் பாரத் திட்டம் - அண்ணாமலை பெருமிதம்!
நாட்டின் சுகாதார வளர்ச்சியில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் புரட்சியை ஏற்படுத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் ஏழை குடும்பத்தினருக்கு ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது.
சுகாதாரத் துறையில் இந்தத் திட்டம் புரட்சியை ஏற்படுத்தியிருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆங்கில இதழ் ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார்.
அப்பல்லோ மருத்துவமனை தலைமை நிர்வாகி டாக்டர் கரண் தாகுருடன் இணைந்து அண்ணாமலை எழுதிய கட்டுரையில், ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டத்தின் மூலம் கடந்த 2013-14-ஆம் ஆண்டில் மருத்துவத்துக்காக ஏழை மக்கள் தங்கள் வருவாயில் 64 புள்ளி 2 சதவீதத்தை செலவிட்ட நிலையில்,கடந்த 2021-22-இல் இந்த வீதம் 39 புள்ளி 4 சதவீதமாக குறைந்ததாக அண்ணாமலை அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதாரத் துறையில் நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தி பிரதமர் மோடி மேற்கொண்ட கொள்கை சீர்திருத்தங்களால் இந்த சாதனை சாத்தியமானதாக அண்ணாமலை பெருமிதம் தெரிவித்துள்ளார்.