சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சுனிதா வில்லியம்சும், புட்ச் வில்மோரும் கடந்த ஜூன் 5ம் தேதியன்று போயிங்கின் ஸ்டார்லைனரில் 10 நாள் பயணமாக சென்றனர். ஆனால், இருவரும் ஒன்பது மாதங்களாக விண்வெளி நிலையத்திலிருந்து திரும்ப இயலாமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மீண்டும் சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சுனிதாவை அழைத்து வரும் க்ரூ-10 மிஷன் ஒத்திவைக்கப்பட்டதற்கு ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே காரணம் என்று நாசா தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்ட பின் இந்திய நேரப்படி நாளை ராக்கெட்டை விண்ணில் செலுத்த வாய்ப்பு உள்ளதாகவும் நாசா குறிப்பிட்டுள்ளது.