சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்!
பொங்கல் பண்டிகை மற்றும் விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் சுமார் 7 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
Advertisement
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர். இன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனையும், பின்னர் உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
பக்தர்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பொது தரிசனத்தில் 7 மணி நேரமும், நூறு ரூபாய் கட்டண தரிசனத்தில் 5 மணி நேரமும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனிடையே, பக்தர்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு சென்றதால், சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.