செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி!

04:50 PM Dec 17, 2024 IST | Murugesan M

தேனி மாவட்டம் கம்பம் அருகே, சுருளி அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் மீண்டும் அனுமதி வழங்கியுள்ளனர்.

Advertisement

மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள சுருளி அருவிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால், சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நீர்வரத்து சீராகியுள்ளதால் 4 நாட்களுக்கு பின் மீண்டும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் மகிழ்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் அருவியில் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

Advertisement

 

Advertisement
Tags :
MAINTourists allowed to bathe in Suruli Falls again!
Advertisement
Next Article