செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தோல் தொழிற்சாலை உரிமையாளர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும் - உச்ச நீதிமன்றம்

03:30 PM Jan 30, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

வேலூரில் விதிகளை பின்பற்றாமல் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தோல் தொழிற்சாலை உரிமையாளர்களை திகார் சிறைக்கு அனுப்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.

Advertisement

சுற்றுச்சூழலுக்கு கடும் மாசை ஏற்படுத்தும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளை மூடக்கோரி, வேலூர் சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்ற "Reversis Osmosis" தொழில்நுட்பத்தை நிறுவியுள்ளன எனக்கூறி தள்ளுபடி செய்தது.

இதனை எதிர்த்து, வேலூர் சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணைகள் முடிவடைந்து, நீதிபதிகள், ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.

Advertisement

அதன்படி, வேலூர் பாலாற்றில் தோல் தொழிற்சாலைகளால் ஏற்பட்ட மாசால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் ஒய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நிபுணர்கள் குழு அமைத்து வேலூர் பாலாற்று பகுதிகளில் மாசு தொடர்பாக கண்காணிக்க வேண்டும், சுற்றுச்சூழல் மாசை தடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

அத்துடன், விதிகளை மீறி செயல்படும் தோல் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். கடந்த 2009 ஆண்டு பிறப்பித்த உத்தரவின் படி தோல் தொழிற்சாலைகளிடமிருந்து இழப்பீடு தொகையைப் பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும்

மத்திய, மாநில அரசு அதிகாரிகள், சுற்றுச்சூழல் நிபுணர்கள் உள்ளடங்கிய குழு அமைத்து தோல் தொழிற்சாலை கழிவுகளை பாலாற்றில் கலப்பது தொடர்பாக தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மேலும் சுற்றுச்சூழல் மாசையும், பாலாறு மாசடைவதையும் தடுக்க உரிய பரிந்துரைகளை தொழிற்சாலைகளுக்கு வழங்க வேண்டும் என்றும், தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சுற்றுச்சூழல் விதிகளை அனைத்து தொழிற்சாலைகளும் கடைபிடிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.

மேலும், விதிகளை மீறி செயல்பட்டு சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தும் தோல் தொழிற்சாலை உரிமையாளர்களை திகார் சிறைக்கு அனுப்ப வேண்டும் என எச்சரிக்கை விடுத்து, வழக்கை நான்கு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement
Tags :
FEATUREDMAINsupreme courtvelloretanneries ownerspolluting the environmentVellore Environment Monitoring GroupReversis Osmosis
Advertisement