செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சுற்றுலா வேன் ஓட்டுநரை கடித்து காயப்படுத்திய தெரு நாய்கள்!

06:04 PM Jan 29, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா வேன் ஓட்டுநரை தெரு நாய்கள் சூழ்ந்துகொண்டு சரமாரியாக கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு நாள்தோறும் அண்டை மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வாடிக்கை. அந்த வகையில் நேற்று கர்நாடக மாநிலத்தில் இருந்து வாடகை வேனில் சுற்றுலா பயணிகள் சிலர் கொடைக்கானலுக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில், வேன் ஓட்டுநர் செந்தில்குமார் தங்கும் விடுதியில் இருந்து தேநீர் அருந்துவதற்காக வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு சுற்றித்திரிந்த சில தெரு நாய்கள், செந்தில் குமாரை சரமாரியாக கடித்ததில் அவருக்கு வலது காலில் படுகாயம் ஏற்பட்டது.

Advertisement

தொடர்ந்து நாய்களை விரட்டியடித்த அப்பகுதி மக்கள், காயமடைந்த செந்தில் குமாரை சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக பேட்டியளித்த பாதிக்கப்பட்ட செந்தில் குமார், கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கு நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Advertisement
Tags :
kodaikanalMAINTourist van driver bitten and injured by stray dogs!
Advertisement