சுவாமிமலை முருகன் கோயில் பங்குனி பெருவிழா!
10:52 AM Mar 18, 2025 IST
|
Ramamoorthy S
கும்பகோணம் அருகே சுவாமிமலை முருகன் கோயிலில் பங்குனி பெருவிழாவையொட்டி யானை விரட்டல் நிகழ்வு நடைபெற்றது.
Advertisement
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 4ம் படை வீடான சுவாமிநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நிகழ்வாண்டு பங்குனி திருவிழாவையொட்டி யானை விரட்டல் நிகழ்வு நடைபெற்றது.
இதில் தினைபுனம் காத்த வள்ளியை விநாயகப்பெருமான் யானை உருவத்தில் வந்து விரட்டும் காட்சியும், பின்னர் முருகப்பெருமான் உண்மையான ரூபத்தில் காட்சியளிப்பதும் நிகழ்த்தி காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Advertisement
Advertisement