சூரியனை பற்றிய ஆய்வுக்காக இணை செயற்கைக்கோள்களை உருவாக்கியது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்!
10:04 AM Nov 26, 2024 IST | Murugesan M
சூரியனைப் பற்றிய ஆய்வுக்காக, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் உருவாக்கிய இணை செயற்கைக்கோள்களை, டிசம்பர் 4-ம் தேதி இஸ்ரோ விண்ணுக்கு அனுப்புகிறது.
சூரியனின் ஒளிவட்ட பகுதியை ஆய்வு செய்ய இணை செயற்கைக்கோள்களை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் உருவாக்கியுள்ளது.
Advertisement
புரோபா-3 திட்டம் என பெயரிடப்பட்டுள்ள இந்த இரு செயற்கைக்கோள்கள், நாள் ஒன்றுக்கு 6 மணி நேரம் பறந்து சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது
சூரியனை பற்றி ஆய்வுக்கு ஒரே செயற்கைகோளில் மிகப் பெரிய கருவிகளை பொருத்த முடியாது என்பதால், இந்த இணை செயற்கைகோள்கள் வடிமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Advertisement
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த இணை செயற்கைக்கோள்களை, பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் டிசம்பர் 4-ம் தேதி விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
Advertisement