செங்கல்பட்டு தனியார் பள்ளியில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் - கௌரவிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள்!
12:50 PM Oct 28, 2024 IST
|
Murugesan M
செங்கல்பட்டு, தனியார் பள்ளயில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் தூய்மை பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
Advertisement
ஸ்ரீ கே. சுன்னிலால் ஜெயின் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் ஆசிரியர்கள்,மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது தூய்மை பணியாளர்கள் தேசிய கொடியை ஏற்றுமாறு விழா குழுவினர் கேட்டுக்கொணடனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் தேசிய கொடி ஏற்றினர். பின்னர் அவர்களுக்குப் புத்தாடை வழங்கப்பட்டு உணவு பரிமாறப்பட்டது.
Advertisement
Advertisement