For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

செங்கல்பட்டு புறவழிச்சாலையில் போக்குவரத்து நெரிசல்!

04:06 PM Jan 12, 2025 IST | Murugesan M
செங்கல்பட்டு புறவழிச்சாலையில் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு புறவழிச்சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் பணிபுரியும் ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.

Advertisement

தென் மாவட்டங்களை நோக்கி மக்கள் ஒரே நேரத்தில் செல்வதால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, செங்கல்பட்டு புறவழிச்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இருகுன்றம் பள்ளி பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், அப்பகுதியை கடக்க மக்கள் வெகுநேரம் காத்திருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டனர்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement