சட்டவிரோதமாகச் செயல்படும் செங்கல் சூளைகள் : புகார் அளித்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது தாக்குதல்!
01:49 PM Mar 18, 2025 IST
|
Murugesan M
தென்காசி அருகே சட்டவிரோதமாகச் செயல்படும் செங்கல் சூளைகள் குறித்து புகார் அளித்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
விஸ்வநாதப்பேரி பகுதியைச் சேர்ந்த நாதக பிரமுகர் கார்த்திக் அங்குள்ள செங்கல் சூளையைப் புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது அதன் உரிமையாளர் மற்றும் அங்கிருந்த பணியாளர்கள் தம்மைத் தாக்கியதாக கார்த்திக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக காவல்துறை எந்த நடவடிக்கை எடுக்காமல், தம் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.
Advertisement
மேலும், சட்டவிரோதமாகச் செயல்படும் செங்கல் சூளைகள் குறித்து புகார் அளித்தால் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டினார்.
Advertisement