செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் நீக்க வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்!
07:32 AM Mar 25, 2025 IST
|
Ramamoorthy S
செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் நீக்க வேண்டுமென பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
Advertisement
இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஜாமீனில் வெளிவந்ததும், உடனடியாக அமைச்சர் பதவியேற்றதற்கு விளக்கம் கொடுக்குமாறு செந்தில்பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
ஆனால் அதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் கொடுக்காமல் இருப்பதை, உச்சநீதிமன்றம் கடுமையாகக் கண்டித்திருக்கிறது என அவர் கூறியுள்ளார்.
Advertisement
ஜாமீன் கிடைப்பதற்காக பொய் சொல்லி, உச்சநீதிமன்றத்தையே ஏமாற்றியுள்ள செந்தில்பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என விமர்சித்துள்ள அண்ணாமலை, உடனடியாக, செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து முதலமைச்சர் நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Advertisement