செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

செந்தில் பாலாஜி வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்த்த மனு தள்ளுபடி!

06:40 PM Mar 28, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்துக் கழக மோசடி வழக்குகளை தனித்தனியாக விசாரிக்கக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Advertisement

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி, வழக்குகளை தனித்தனியாக விசாரிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Advertisement
Tags :
MAINSenthil Balaji's petition opposing the combined investigation of the cases dismissed!செந்தில் பாலாஜி
Advertisement