செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சென்னையில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் - விசாரணை நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

12:44 PM Nov 13, 2024 IST | Murugesan M

சென்னையில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் - விசாரணை நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் திரு. பாலாஜி அவர்களை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர்  பாலாஜி அவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.

Advertisement

அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் - காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது.

இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்  என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
doctor balaji stabbedguindyKalaignar Centenary Super Speciality HospitalMAINMK Stalin
Advertisement
Next Article