செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சென்னையில் அழுகிய நிலையில் தந்தை, மகள் உடல் மீட்பு - போலீஸ் தீவிர விசாரணை!

06:15 PM Jan 30, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

சென்னை திருமுல்லைவாயலில் அழுகிய நிலையில் தந்தை, மகள் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சிந்தியா என்பவர் கணவரை பிரிந்து தனது தந்தை சாமுவேலுடன் வசித்து வந்தார். சாமுவேலுக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதால் தனது மகளுடன் சென்னை திருமுல்லைவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் இருவரும் சொந்த ஊர் செல்லாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற போலீசார் கதவை உடைத்து பார்த்த போது இருவரும் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த மருத்துவர் சாமுவேல் எபினேசருடன், சிந்தியாவுக்கு பழக்கம் இருந்தது தெரியவந்தது.

Advertisement

மேலும் கடந்த 3 மாதங்களுக்கு முன் சிந்தியாவின் தந்தைக்கு, சாமுவேல் எபினேசர் டயாலிசிஸ் சிகிச்சை அளித்துபோது அவர் உயிரிழந்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அப்போது சிந்தியாவை சாமுவேல் எபினேசர் தாக்கியதால் படுகாயமடைந்த அவர் உயிரிழந்ததும் வீட்டை பூட்டிவிட்டு மருத்துவர் சாமுவேல் எபினேசர் சென்றுவிட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவர் சாமுவேல் எபினேசருடன் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Tags :
kidney diseaseSamuel EbenezeMAINChennaidecomposed bodiesThirumullaivayalather and daughters recoverdScindiaSamuel.
Advertisement