செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சென்னையில் ஒரு நிர்பயா? : இளம் பெண் ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தல்!

09:25 PM Feb 05, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

சென்னை கிளாம்பாக்கம் கருணாநிதி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வடமாநில பெண் கடத்தப்பட்டது எப்படி ? என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.

Advertisement

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், சென்னை மாதவரத்துல தன்னோட தோழியோடு விடுதியில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்துல வேலை செஞ்சுட்டு வறாங்க. சேலத்துல இருக்க இன்னொரு தோழியை பாக்க போயிட்டு சென்னை திரும்புன அந்த இளம்பெண் 11 மணி போல கிளாம்பாக்கம் கருணாநிதி பஸ் ஸ்டாண்டுக்கு வராங்க. மாதவரம் போற பஸ்ஸ பிடிக்கிறதுக்காக பஸ் ஸ்டாண்டுக்கு எதிர்புறமா சூட்கேசோடா நின்னுட்டு இருந்த பொண்ணுக்கு முன்னாடி ஒரு ஆட்டோ வந்து நிக்குது. இரவு நேரத்துல பஸ் வராதுனும், வாங்க நான் போய் இறக்கி விடுறேனு அந்த ஆட்டோ டிரைவர் சொல்லியிருக்காரு... எப்படியாச்சும் தன்னோட விடுதிக்கு போயிடலாம்னு ஆட்டோவுல ஏறுராங்க அந்த இளம் பெண்.

மாதவரத்துக்கு போற சாலையில போகாம வண்டலூர் கிட்ட இருக்க வெளிவட்ட சாலையை நோக்கி அந்த ஆட்டோ போகுது... போகும்போதே, ஆட்டோ டிரைவர் ஒருபோன் பண்ணி பேசுறாரு. அந்த போன் கால்ல கட் பண்ண பத்து நிமிசத்துல ஆள் நடமாட்டம் இல்லாத இருட்டான இடத்துல, 50 வயசுக்கு மேல இருக்க ரெண்டு பேர் ஆட்டோவுல ஏறுனத பாத்து அந்த பொண்ணு அதிர்ச்சியாகுறாங்க. ஆட்டோவுல நம்பி ஏறுன அந்த பொண்ணுகிட்ட டிரைவர் உட்பட மூனு பேரும் பாலியல் துன்புறுத்தல்ல ஈடுபட்டதா சொல்லப்படுது. ஆள் நடமாட்டம் இல்லாத இருட்டான சாலைங்குறதால அந்த பொண்ணு போட்ட சத்தமும் யாருக்குமே கேக்கல.

Advertisement

அதுக்கு அப்புறம் அந்த பொண்ணு தன்னோட தோழிகளுக்கு வாட்ஸ் அப் மூலமா லொகேஷன அனுப்பி தன்னோட பிரச்னையை சொல்லிருக்காங்க. அத பாத்த தோழிங்க திருப்பி தொடர்பு கொண்டப்ப அந்த பொண்ணோட நம்பர் ரீச் ஆகல... அதுனால, அந்த தோழிங்க போலிசுக்கும் தகவல் சொல்லிருக்காங்க. கட்டுப்பாட்டு அறை மூலமா சுற்று வட்டாரத்துல இருக்க எல்லா போலீஸ் ஸ்டேசனுக்கும் தகவல் பறக்க, ரோந்தும் தீவிரப்படுத்தப்படுது.

பாதிப்புக்குள்ளான இளம்பெண்ணின் மொபைல் போன் சிக்னல வச்சு போலீஸ் நெருங்குறத பாத்த அந்த கொடூரக் கும்பல் குன்றத்தூர் கிட்ட ஒரு ஆட்டோவ நிறுத்தி அந்த பொண்ண கோயம்பேடு பஸ்டாண்டுல இறக்கிவிடச் சொல்லிட்டு தப்பிச்சு போயிடுறாங்க. ஆட்டோவுல ஏறுன பத்து நிமிசத்துல கதறி அழுத அந்த பொண்ணுகிட்ட ஆட்டோ டிரைவர் விசாரிச்சதுல 50 வயதுச்சுக்கு மேல இருக்க மூனு பேரு தன்னோட பேத்தி வயசுல இருக்க பொண்ண பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கிறது தெரியவருது. கழுத்துல கத்தி வச்சு மிரட்டுனதாகவும், கழுத்துல நகக் காயங்கள் இருப்பதையும் காட்டுன அந்த பொன்னு, போலீஸ் ஸ்டேசனுக்கு போகச் சொல்லியிருக்காங்க.

பாதிக்கப்பட்ட பொன்ன தன்னோட ஆட்டோவுல ஏத்திக்கிட்ட நல்ல மனசு கொண்ட இன்னொரு ஆட்டோ டிரைவரு, போலீச தொடர்பு கொண்டு நடந்த விவரத்தை சொல்லியிருக்காரு. அதோட பாதிக்கப்பட்ட பெண்ண மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி அவங்க தோழிகலோட அனுப்பி வச்சுருக்காங்க போலீஸ். மேலும் கிளாம்பாக்கம் பஸ்டாண்ட்ல இருந்த சிசிடிவி கேமிரா மூலமா கொடூரச் சம்பவத்துல ஈடுபட்டவங்கள காவல்துறை தீவிரமா தேடிட்டு இருக்கு.

தமிழ்நாட்டுல ஏற்கனவே பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகிவரக்கூடிய நிலையில, இப்ப கிளாம்பாக்கம் கருணாநிதி பஸ் ஸ்டாண்டுல நின்னுட்டு இருந்த இளம்பெண் ஒருத்தவங்க கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கியிருக்க சம்பவம் ஒட்டுமொத்த பெண்கள் மத்தியிலயும் ஒருவிதமான பயத்தையும் பதட்டத்தை ஏற்படுத்தியிருக்குனே சொல்லலாம்.

Advertisement
Tags :
FEATUREDMAINA Nirbhaya in Chennai?சென்னை கிளாம்பாக்கம்A young woman was abducted in an auto and sexually harassed
Advertisement