செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சென்னையில் கடல் நீர்மட்டம் 4.3 மி.மீ உயர்வு - மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் தகவல்!

02:15 PM Dec 21, 2024 IST | Murugesan M

சென்னையில் கடல் நீர்மட்டம் ஆண்டுக்கு, 4 புள்ளி 3 மில்லி மீட்டர் வரை உயர்ந்துள்ளதாக, மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு, மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜிதேந்தர் சிங் அளித்த பதில் அளித்தார்.

அதில், பல்வேறு காரணங்களினாலும், பருவநிலை மாற்றத்தாலும் ஆண்டுக்கு ஆண்டு கடல் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது எனவும், இது தொடர்பாக ஆய்வு செய்ய 5 ஆண்டுகள் போதுமான காலம் அல்ல எனவும், குறைந்தது 30 ஆண்டுகள் தேவை என்றும் தெரிவித்தார்.

Advertisement

பல்வேறு அறிவியல் ஆய்வுகளின்படி, 1993 -ம் ஆண்டு முதல் 2020 -ம் ஆண்டு வரை, சென்னையில் கடல் நீர்மட்டம் ஆண்டுக்கு 4 புள்ளி 31 மில்லி மீட்டர் வரை உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.

கடந்த நூறு ஆண்டுகளில், 70 முதல் 80 சென்டி மீட்டர் வரை கடல் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
Tags :
FEATUREDMAINclimate changeMinister Jitender SinghChennai sea level
Advertisement
Next Article