சென்னையில் கடும் பனிமூட்டம் - முகப்பு விளக்குளை எரிய விட்டப்படி சென்ற வாகனங்கள்!
சென்னை திருவொற்றியூர், மணலி, காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவியது.
கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்தே சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. அந்த வகையில் விம்கோ நகர் ரயில் நிலையம், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிமூட்டமாக காணப்பட்டது.
இதனால் அவ்வழியாக பயணித்த ரயில்கள், அதிக ஒலி எழுப்பிக்கொண்டு, முகப்பு விளக்குளை எரியவிட்டப்படி சென்றன. இந்த கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகளும் அவதியடைந்தனர்.
குறிப்பாக சென்னை சென்ட்ரலில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட புறநகர் ரயில்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு ஒலி எழுப்பிக் கொண்டு சென்றது.
குறிப்பாக பனி மூட்டதின் காரணமாக விரைவு ரயில்கள் மற்றும் புறநகர் ரயில்கள் சிக்னல் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்பட்டது.