சென்னையில் காதலிக்க மறுத்த பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி - இருவர் கைது!
02:57 PM Jan 03, 2025 IST | Murugesan M
சென்னை வால்டாக்ஸ் சாலையில் காதலிக்க மறுத்த பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
வால்டாக்ஸ் சாலையில் வசித்து வரும் பெண் ஒருவர், பாரிமுனையில் உள்ள பழக்கடையில் வேலை பார்த்து வருகிறார். வழக்கம்போல வேலை முடிந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த அவரை 2 இளைஞர்கள் வழிமறித்தனர்.
Advertisement
பின்னர், பெண்ணின் உடலில் பெட்ரோல் ஊற்றி கொளுத்த முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிட்ட நிலையில் இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், அர்ஜூன், ஜேம்ஸ் ஆகிய இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
Advertisement
அப்போது அந்த பெண்ணை ஜேம்ஸ் ஒருதலையாக காதலித்து வந்ததும், காதலிக்க மறுத்ததால் கொலை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Advertisement