சென்னையில் தொடரும் மழை - முக்கிய சாலைகளில் நீர் தேக்கம்!
10:50 AM Nov 30, 2024 IST
|
Murugesan M
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை தரமணியில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
Advertisement
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல், புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருவதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தரமணி எம்ஜிஆர் சாலையில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது.
இதனால், சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும், மென்பொருள் நிறுவனங்கள் அதிகம் உள்ள இந்த சாலையில் வாகனங்கள் தத்தளித்து செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
Next Article