For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

சென்னையில் நடைபெற்ற ஜடா பாராயணம் நிகழ்ச்சி!

03:31 PM Dec 15, 2024 IST | Murugesan M
சென்னையில் நடைபெற்ற ஜடா பாராயணம் நிகழ்ச்சி

சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் கலைமகள் மாத இதழ் மற்றும் தேஜஸ் பவுண்டேசன் சார்பில் ஜடா பாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கல்பட்டு கணேஷ கனபாடிகள் தலைமையில் கணபதி பூஜை, லக்ஷ்மி பூஜை, கனபாடம் மற்றும் ஜடா பாராயண பூஜைகள் நடைபெற்றன.

Advertisement

இந்நிகழ்ச்சியை ஆர்.கே.ராகவன் ஐபிஎஸ் தொடங்கி வைத்த நிலையில், கலைமகள் மாத இதழ் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், தேஜஸ் பவுண்டேசன் நிர்வாக அறங்காவலர் பி.டி.டி ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஸ்ரீ மான் உ.வே.ஆனந்த பத்மநாபாச்சாரியார், தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது, இது போன்ற கர்ம பிரச்சாரங்கள் நடைபெறுவது, தேசத்திற்கும், தேச மக்களுக்கும் நலன்தரும் என்று அவர் கூறினார்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement