சென்னையில் நடைபெற்ற மாரத்தான் போட்டி - சுமார் 25,000 பேர் பங்கேற்பு!
02:00 PM Jan 05, 2025 IST | Murugesan M
சென்னையில் 25 ஆயிரம் பேர் பங்கேற்ற மாரத்தான் போட்டி கோலாகலமாக நடைபெற்றது.
சென்னையில் பிரெஷ் ஒர்க்ஸ் இன்க் மற்றும் தி சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில், நேப்பியர் பாலத்திலிருந்து 4 பிரிவுகளாக மாரத்தான் போட்டி இன்று அதிகாலை நடைபெற்றது.
Advertisement
இதில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டப்பந்தய வீரர், வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். அதிகாலை 4 மணிக்கு துவங்கிய மாரத்தான் போட்டி 8 மணிக்கு நிறைவடைந்தது.
இதன் காரணமாக மாரத்தான் நடைபெற்ற வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. அதிகாலை 3 மணி முதலே 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன.
Advertisement
இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய மாரத்தான் போட்டியாக கருதப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் நிதி, 5 தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Advertisement