சென்னையில் நீதிபதி வீட்டில் தகராறு - இரும்புக்கதவை தாண்ட முயன்ற காவலர் தவறி விழுந்து உயிரிழப்பு!
02:59 PM Dec 21, 2024 IST | Murugesan M
சென்னையில் நீதிபதி வீட்டில் மதுபோதையில் தகராறு செய்த காவலர், இரும்பு கதவை தாண்ட முயற்சித்தபோது தவறி விழுந்து உயிரிழந்தார்.
செம்பியம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவலராக பணியாற்றிய செல்வகுமார் என்பவர், கே.கே நகர் பகுதியில் வசித்து வந்தார். மின்வாரிய உதவி பொறியாளரான அவரது அண்ணன் தனது மனைவியும் செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதியுமான தனலட்சுமியுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார்.
Advertisement
இந்நிலையில், செல்வகுமார் மதுபோதையில் தனது அண்ணன் வீட்டுக்கு சென்று அவரை அறையில் வைத்து பூட்டியதாக தெரிகிறது. இது அவரது அண்ணன் பெருமாள் அளித்த தகவலின்பேரில் கே.கே நகர் போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டனர்.
அப்போது பின்புற கதவு வழியாக செல்வக்குமார் வெளியே குதித்த நிலையில், எதிர்பாராத விதமாக சுற்றுச்சுவர் மீது இருந்த கம்பி குத்தி உயிரிழந்தார்.
Advertisement
Advertisement