செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பெற்றோர் கருத்து : ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை!

01:58 PM Jan 29, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

இளம்பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதால் பெற்றோர் சென்னைக்கு படிக்க அனுப்ப மறுப்பதாக, பல மாணவிகள் தன்னிடம் கண்ணீருடன் கூறியதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார்.

Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பொடவூர் பகுதியில் அகில இந்திய மாதர் சங்கத்தின் 93-ம் ஆண்டு மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் இந்தியா முழுவதிலும் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாதர் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி,

Advertisement

பட்டமளிப்பு விழாக்களின்போது தன்னை சந்தித்து பேசும் பல மாணவிகள், சென்னையில் இளம்பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தங்களின் பெற்றோர் கருதுவதாகவும், அதனால் சென்னைக்கு படிக்க அனுப்ப அவர்கள் மறுப்பதாகவும் கண்ணீர் மல்க கூறியதாக குறிப்பிட்டார்.

மேலும், பெண்கள் அனைவருக்கும் பாதுகாப்பான நகரமாக சென்னையை மாற்ற வேண்டும் என்பது அவசியம் என அவர் தெரிவித்தார்.

Advertisement
Tags :
CHENNAI NEWSchennai news todayDMKFEATUREDgovernor rn raviMAINtn governor rn ravitn govtஆளுநர் ஆர்.என். ரவி
Advertisement