சென்னை இஎஸ்ஐ மருத்துவமனையில் மாணவரும், ஊழியரும் மோதல்!
03:11 PM Mar 22, 2025 IST
|
Murugesan M
சென்னை, கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் மாணவரும், ஊழியரும் மோதிக் கொண்டனர்.
Advertisement
கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆல்பர்ட். சென்னை கேகே நகர் இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் 4 ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வருகிறார்.
இவர் அங்குள்ள இஎஸ்ஐ விடுதியில் தங்கி உள்ளார். அவர் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்தார். அதனை டெலிவரி செய்வதற்காக டெலிவரிபாய் கேகே நகர் இஎஸ்ஐ அரசு மருத்துவமனை மாணவர் விடுதிக்கு வந்தார்.
Advertisement
ஆனால் விடுதி காவலாளி அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனையறிந்து அங்கு வந்த ஆல்பர்டிடம் ஒப்பந்த ஊழியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இது வாக்குவாதமாக மாறியதால் இருவரும் தாக்கிக் கொண்டனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
Advertisement