செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சென்னை ஈசிஆர் : பெண்களை ஆபாசமாக பேசி, அவர்களை துரத்திச் சென்ற திமுக கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள்!

12:16 PM Jan 29, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

சென்னை ஈசிஆர் அருகே திமுக கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள் சிலர், பெண்களை ஆபாசமாக பேசியும், அவர்களை துரத்திச் சென்றும் அராஜகத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி துள்ளது.

Advertisement

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் பகுதியில் வசித்து வரும் சின்னி திலகா என்பவர், கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில், கடந்த 25-ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக திமுக கொடி கட்டிய கார்களில் வந்த இளைஞர்கள் சிலர், மது போதையில் தங்களை தகாத வார்த்தைகள் பேசி வம்புக்கு இழுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாங்கள் அங்கிருந்து கிளம்பியபோது, தங்களை பின்தொடர்ந்து காரில் துரத்தி அந்த இளைஞர்கள் தொல்லை கொடுத்ததாகவும் அந்த பெண், புகாில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், இச்சம்பவம் குறித்து, வீடியோ காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement
Tags :
Chennai ECRDMKFEATUREDMAIN
Advertisement