சென்னை : கஞ்சா விற்பனை செய்த திரிபுரா மாநில இளம்பெண் கைது!
07:27 PM Mar 20, 2025 IST
|
Murugesan M
இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளைஞர்களைக் கஞ்சா விற்பனைக்குப் பயன்படுத்திய இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
Advertisement
சென்னை திரிசூலம் ரயில்வே கேட் பகுதியில் பெரிய பையுடன் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த இளம்பெண்ணைப் பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் 3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து
காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், அவர் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த பாயல் தாஸ் என்பது தெரியவந்தது. கடந்த 3 ஆண்டுகளாக ரயில் மூலம் சென்னைக்குக் கஞ்சா கடத்தி வந்து, கல்லூரி மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு அவர் விற்பனை செய்துள்ளார். அத்துடன், சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களைப் பதிவிட்டு இளைஞர்களைக் கவர்ந்த பாயல் தாஸ், தன்னிடம் மயங்கிய நபர்களைக் கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது.
Advertisement
Advertisement