செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 28 மின்சார ரயில்கள் இன்று முதல் தற்காலிகமாக ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

03:14 PM Nov 22, 2024 IST | Murugesan M

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 28 மின்சார ரயில்கள் இன்று முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூா், அரக்கோணம் ஆகிய பகுதிகளுக்கு நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ரயில்வே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இன்று முதல் இரு மாா்க்கமாகவும் 28 மின்சார ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது

Advertisement

சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை இயக்கப்படும் மற்ற ரயில்கள் வழக்கமாக இயக்கப்படும் நேரத்துக்கு பதிலாக 5 முதல் 10 நிமிடம் தாமதமாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயணிகள் வசதிக்காக 15 முதல் 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயங்கும் வகையில் மின்சார ரயில் அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Advertisement
Tags :
28 electric trains temporarily canceledChennai Beach TambaramFEATUREDMAINRailway Administration
Advertisement
Next Article