For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

சென்னை கண்ணகி நகரில் பச்சிளம் குழந்தை கடத்தல் - போலீஸ் விசாரணை!

07:30 PM Nov 14, 2024 IST | Murugesan M
சென்னை கண்ணகி நகரில் பச்சிளம் குழந்தை கடத்தல்   போலீஸ் விசாரணை

சென்னை கண்ணகி நகரில் பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட நிலையில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த ஆரோக்கியதாஸ் - நிஷாந்தி தம்பதியினருக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

Advertisement

இந்நிலையில், ஆரோக்கியதாஸின் வீட்டுக்கு வந்த பெண் ஒருவர் குழந்தைக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள திட்டங்களை வாங்கி தருவதாக கூறி தாய் மற்றும் குழந்தையை தி.நகருக்கு ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார்.

அப்போது, பால், பிஸ்கெட் வாங்கி வருவதாக கூறி குழந்தையை அப்பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டு நிஷாந்தி கடைக்கு சென்றுள்ளார்.  இதனையடுத்து திரும்பிவந்து பார்த்தபோது அப்பெண்ணும், குழந்தையும் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த நிஷாந்தி, கண்ணகி நகர் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.

Advertisement

இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement
Tags :
Advertisement