சென்னை செங்குன்றம் அரசு வங்கியில் கொள்ளை முயற்சி - அலாரம் ஒலித்ததால் சிக்கிய கொள்ளையன்!
12:36 PM Nov 22, 2024 IST
|
Murugesan M
சென்னை அடுத்துள்ள செங்குன்றத்தில் அரசு வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
Advertisement
செங்குன்றத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான வங்கி ஒன்றில், நள்ளிரவில் உள்ளே நுழைந்த நபர் ஒருவர், ஜன்னல் கம்பியை அறுத்துக் கொண்டு வங்கிக்குள் சென்று கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.
அப்போது, வங்கியில் அலாரம் ஒலித்ததால் வங்கியின் மேலாளர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனே தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த ரோந்து போலீசார், அந்த நபரை கைது செய்தனர். அவர் சென்னை வீராபுரத்தை சேர்ந்த சுரேஷ் என்பது தெரிய வந்த நிலையில் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
Next Article