செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

11:07 AM Dec 13, 2024 IST | Murugesan M

சென்னை செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1,000 கனஅடியில் இருந்து 4,000 கனஅடியாக அதிகரித்துள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திற்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஏரியின் நீர்மட்டம் 24 அடியில் இருந்து 23 புள்ளி 29 அடியாக உயர்ந்துள்ளது.

ஏரியின் மொத்த கொள்ளளவான 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடியில் தற்போது 3 ஆயிரத்து 453 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 498 கன அடி வந்து கொண்டிருப்பதால் இன்று காலை வினாடிக்கு 1000 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

Advertisement

இந்தநிலையில், ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,000 கனஅடியில் இருந்து 4,000 கனஅடியாக அதிகரித்துள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement
Tags :
chennai metrological centerFEATUREDheavy rainlow pressureMAINmetrological centerrain alertrain warningsembrampakkam laketamandu rainwater release from sedmbrampakkamweather update
Advertisement
Next Article