செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சென்னை திருமங்கலத்தில் உள்ள வணிக வளாகத்தில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது : சென்னை மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவு!

08:33 PM Mar 31, 2025 IST | Murugesan M

சென்னை திருமங்கலத்தில் உள்ள வணிக வளாகத்தில், வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது எனச் சென்னை மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

திருமங்கலத்தில் உள்ள வணிக வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படுவதை எதிர்த்து, அருண்குமார் என்பவர் சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம், வணிக வளாகம் தரப்பில் முன்வைத்த வாதத்தை நிராகரித்தது.

Advertisement

வாடிக்கையாளர்களிடம் இருந்து பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும்,  இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

மேலும்,  மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், வழக்கு செலவாக 2 ஆயிரம் ரூபாயும்  வழங்க வணிக வளாக தரப்புக்கு ஆணையிட்டது.

Advertisement
Tags :
MAINChennaiChennai District Consumer Commission orders that parking fees should not be charged at the commercial complex in ThirumangalamVR Mall
Advertisement
Next Article