செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சென்னை : நீர்நிலை பகுதியில் கட்டப்பட்டிருந்த கடைகள் இடித்து அகற்றம்!

06:20 PM Mar 29, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

சென்னையை அடுத்த பல்லாவரம் ரயில் நிலையம் அருகே நீர்நிலை பகுதியில் கட்டப்பட்டிருந்த கடைகளை, தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர் நீதிமன்ற உத்தரவின்படி ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.

Advertisement

பாடர் சாலையில் உள்ள நீர்நிலை பகுதியில் கட்டப்பட்டிருந்த கடைகள் மற்றும் குடியிருப்புகளை அகற்ற உத்தரவிடக்கோரிய வழக்கில், ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனடிப்படையில் அப்பகுதிக்குச் சென்ற அதிகாரிகள் 4 கடைகளை இடித்து அகற்றிய நிலையில், மாநகராட்சி சார்பில் முறையாக நோட்டீஸ் வழங்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதன் காரணமாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement
Tags :
Chennai: Shops built in the watershed area to be demolished!MAINசென்னைபல்லாவரம் ரயில் நிலையம்
Advertisement