சென்னை : பதிவெண் இல்லாத இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் இளைஞர்கள் சாகசம்!
04:17 PM Mar 24, 2025 IST
|
Murugesan M
சென்னை அண்ணா சாலையில் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Advertisement
சென்னையில் மிக முக்கிய சாலையான அண்ணா சாலையில், நந்தனம் சிக்னலில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருசக்கர வாகன பந்தயத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பதிவெண் இல்லாமலும், தலைக்கவசம் அணியாமலும் வீலிங் செய்தனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து காவலர்களுக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement