செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சென்னை பிராகிருதம் அறிவகம், கூடு அறக்கட்டளைக்கு பாராட்டு - பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

03:46 PM Nov 24, 2024 IST | Murugesan M

சென்னையை சேர்ந்த பிராகிருத அறிவகம் மற்றும் கூடுகள் அறக்கட்டளையை மனதின் குரல் நிகழ்ச்சியில் குறிப்பிட்டு பேசியதற்கு பிரதமர் மோடிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,  சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் கோபாலன் என்பவரின் பிராகிருதம் அறிவகம் மூலம் ஏராளமான குழந்தைகள் பயனடைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இதேபோல், கூடுகள் அறக்கட்டளை என்ற அமைப்பு பள்ளிகளுக்குச் சென்று நமது அன்றாட வாழ்வில் சிட்டுக்குருவிகளின் முக்கியத்துவத்தைப் பற்றி மாணவர்களுக்குக் கற்பித்தும், பறவைகளுக்கு சிறிய மரக் கூடுகளை உருவாக்க கற்றுக்கொடுக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

Advertisement

இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த, இந்த பிராகிருத அறிவகம் மற்றும் கூடுகள் அறக்கட்டளையை மனதின் குரல் நிகழ்ச்சியில் குறிப்பிட்டு பேசியதற்கு பிரதமர் மோடிக்கு, அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
annamalai thanksFEATUREDKoodugal TrustMAINPM ModiPrakrith Arivagam initiativeTamil Nadu
Advertisement
Next Article