சென்னை புறநகரில் கடும் பனி மூட்டம் - ரயில்கள் தாமதம்!
சென்னை பொத்தேரியில் கடும் பனிமூட்டம் நிலவியதால் புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
Advertisement
கடந்த சில நாட்களாக ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி உட்பட சென்னையின் புறநகர் பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், வாகன ஓட்டிகள் கடும் சிரமமடைந்தனர். இந்நிலையில், பொத்தேரியில் பனிமூட்டம் காரணமாக, ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பணிக்கு செல்வோர் பாதிப்படைந்தனர்.
திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை வேளையில் கடும் பனிமூட்டம் நிலவியது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். இதனால் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே கடும் சிரமத்திற்கு மத்தியில் வாகனத்தை இயக்கி சென்றனர்.