சென்னை புறநகர் பகுதிகளில் தனியார் மினி பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்து துறை அனுமதி!
12:14 PM Jan 23, 2025 IST
|
Sivasubramanian P
சென்னை புறநகர் பகுதிகளில் தனியார் மினி பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை அனுமதி வழங்கியுள்ளது.
Advertisement
சென்னையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதல் சேவைக்காக சென்னை புறநகர் பகுதிகளில் தனியார் மினி பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை அனுமதி வழங்கியுள்ளது.
பிப்ரவரி முதல் சென்னை புறநகர் பகுதிகளில் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படும் என்றும், சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் மினி பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
தனியார் மினி பேருந்துகளில் 25 பேர் மட்டும் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் மினி பேருந்துகளின் அதிகபட்ச பயண தூரம் 25 கிலோ மீட்டர் எனவும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
Advertisement
Next Article