சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார் சீமான்!
09:49 AM Nov 22, 2024 IST | Murugesan M
நடிகர் ரஜினிகாந்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்த்து பேசினார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் நடிகர் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். சந்தித்தார். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் களம் குறித்து இருவரும் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
கடந்த 2ஆம் தேதியே ரஜினியை சந்திக்க சீமான் அனுமதி கேட்டிருந்ததாகவும், ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த சந்திப்பு தள்ளிப் போனதாகவும் கூறப்படுகிறது.
விஜய் ரசிகர்களும் நாம் தமிழர் கட்சியினரும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து மாறி மாறி வார்த்தைகளால் தாக்கி கொண்டனர். இந்த சூழலில் சீமான் ரஜினியை நேரில் சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement