சென்னை மாங்காட்டில் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட 4 வீடுகள் இடித்து அகற்றம்!
01:27 PM Jan 28, 2025 IST
|
Murugesan M
சென்னை மாங்காட்டில் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டிருந்த 4 வீடுகளை அதிகாரிகள் இடத்து அப்புறுப்படுத்தினர்.
Advertisement
மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட மலையம்பாக்கம் செல்லும் லட்சுமிபுரம் பிரதான சாலையில் அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது.
அந்த நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலையில், அவற்றை அகற்ற வருவாய்த்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்தது. இதுதொடர்பாக நோட்டீசும் வழங்கப்பட்டது.
Advertisement
இதனையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் 4 வீடுகளை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீட்டின் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடவே, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
Advertisement