செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல்!

06:39 AM Mar 19, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தொடர் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.

Advertisement

சென்னை மாநகராட்சியின் 2024-25-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர், மாநகராட்சி அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கவுள்ளது. இதில் மாநகராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து மேயர் பிரியா அறிவிக்கவுள்ளார். தொடர்ந்து 2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் சர்பஜெயாதாஸ் தாக்கல் செய்யவுள்ளார்.

இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்கள், வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும், சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் அழகுப்படுத்தும் பணிகள், போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய மேம்பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்கள் இடம்பெற வேண்டும் என சென்னைவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

Advertisement
Tags :
chennai corporationChennai Corporation budgetChennai Mayor PriyaMAINSarbajayadas.Taxation and Finance Committee
Advertisement